search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானசரோவர் புனித யாத்திரை"

    கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை செல்ல முடிவு செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி கேட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    சீனாவின் கட்டுபாட்டில் உள்ள திபெத்தில் கைலாஷ் மலை உள்ளது. இங்கு மானசரோவர் புனித யாத்திரையை பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்து, புத்தமதம், ஜெயின் மற்றும் திபெத் மதம் ஆகிய 4 மதங்களை சேர்ந்த பக்தர்கள் கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். பனி மற்றும் கடினமான பாதை காரணமாக புனித யாத்திரைக்கு குறிப்பிட்ட அளவே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதற்கான முன்கூட்டியே பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டுக்கான யாத்திரைக்காக கடந்த பிப்ரவரி 20-ந் தேதி முதல் மார்ச் 20-ந்தேதி வரை பெயர்கள் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி கேட்டு உள்ளார். மேலும் கைலாஷ் மலைக்கு ஹெலிகாப்டரில் செல்ல அவர் அனுமதியை எதிர்நோக்கி உள்ளதாக தெரிகிறது.

    ராகுல்காந்தியின் மானசரோவர் யாத்திரைக்கு அனுமதி பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ×